One thought on “மேதின வாழ்த்துக்கள்!”

  1. பேராசிரியர் சமுத்திரனுடனான அறிமுகம் முப்பத்துமூன்று வருடங்களுக்கு முன்பு தோழர் விசுவானந்தனூடாக ஏற்பட்டது. நேர்மையாகவும், துணிச்சலுடனும் சமூகத்தில் ஒடுக்கப்படுவோரின் குரலாக ஒலித்துவந்த விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் புத்திஜீவிகளில் சமுத்திரன் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. அவரது வாழ்வில் 33 வருடங்கள் நோர்வேயில் கழிந்துள்ளது. இந்த காலப்பகுதியில் அவரது அறிவும், ஆற்றலும் போய்ச்சேர முடியாத சூழல் நிலவிவந்ததையிட்டு அநங்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இன்றைய காலப்பகுதி எமது சமூகம் நிறையவே தேடவும், சுயவிமர்சனம் செய்யவும், புல்லுருவிகளை இனங்காணவும் வேண்டிய கட்டாயம் நிறைந்தது. இக்காலப்பகுதியில் சமுத்திரனின் இம்முயற்சி பிரசவிப்பது பாராட்டுக்குரியது. இலைமறை காயாக இருந்து இதை சாத்தியமாக்கிய நண்பர்கள் பிரேம்ராஜ், நடராஜன் இருவருக்கும் நன்றிகள் பல. சமுத்திரனுடைய ஆழ்மனதில் பொதிந்திருக்கும் எம் சமூகம் பற்றிய அக்கறையும், அனுபவமும் எமக்கு பயன்படும் ஆய்வுகளாகவும், விவாதங்களுக்கு களம் அமைக்கும் கருப்பொருட்களாகவும் எம்மை வந்தடைய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *